Table of Contents
Anniversary Wishes in Tamil Kavithai
Wedding Anniversary Wishes in Tamil Kavithai : Hello and welcome to our website. Are you looking for Tamil wedding wishes? Don’t be concerned because we have provided the most beautiful Tamil wedding wishes—so many people wishing to express their congratulations to the newlyweds. Nevertheless, because “congratulation” is a simple word, people often want to express their feelings when signing a gift or card. We’ve compiled a list of interesting Tamil marriage wishes for you. So you can use it to your advantage in your marriage. Then spread the word to your friends. Let us now look at the wedding anniversary wishes in tamil.
Wedding Anniversary Wishes In Tamil
விழிகளை காத்திடும் இமையைப் போல்
திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர்
இமைப் போல் இணைப்பிரியாது வாழ்ந்திட வாழ்த்துக்கள்!
சொந்தங்கள் சுற்றி நின்று ஊரே கூடி
நின்று அக்னி சாட்சியாய் இணைந்த கரங்கள்
ஆண்டுகள் கடந்தாலும் பிரிந்திடாது இருந்திட இத்திருமண நாள்
சிறப்புடனே அமைந்திட திருமண நாள் நல் வாழ்த்துக்கள்!
உண்மையான காதலுக்கு திருமண நாட்களே அன்பளிப்பு!
இதுபோல் இன்னும் பல திருமண
நாட்களை கொண்டாட பிரார்த்திக்கிறேன்
அறிமுகமற்ற உங்களை காதலில் விழ
வைத்திட்டது திருமணம்! கரை காணாத காதலைக் கண்டிட
என்றும் இணைப்பிரியாது இருந்திட வாழ்த்துகிறேன்
ஊர் கூடி கொண்டாடிய நாளிதனை
ஊர்மெச்சும் படி வாழ்ந்திட
திருமண நாள் வாழ்த்துக்கள்
கண்ணிமைத்திடும்
நொடிப் பொழுதெல்லாம் காதல்
பெருகிட உறவு பலப்பட கல்யாண நாள்
வாழ்த்துக்கள்
வாழ்நாள் எல்லாம் அன்பும் மகிழ்ச்சியும்
பொங்கிட.. நீடித்து நிலைக்கட்டும்..
இத்திருமண உறவு!
இன்ப துன்பத்தில் நட்புக்களாய்..
என்றும் வண்ணம் மாறாத பறவைகளாய்..
வானூயரப் பறந்திடும் இராஜாளியாய்..
உங்கள் திருமணப் பந்தத்தின் ஆயுள்
வாழ்நாள் முழுதும் தொடர்ந்திட…
இனிய திருமணநாள் வாழ்து்துக்கள்!
புரிதல்களில் பிரிதல் இன்றி நான் நீ என்பது
நாமெனக் கொண்டு விட்டுக்கொடுத்து
வாழ்கையிலே உறவுகள் தோற்பதில்லை…
இதுபோலவே இன்னும் பல திருமணநாட்களை
கொண்டாடி மகிழ்ந்திட பிரார்த்திக்கிறேன்…
மட்டற்ற மகிழ்ச்சியுடன் தொடங்கட்டும் இவ்
இனிய நாள்! திருமணநாள் நல் வாழ்த்துக்கள்!
நிறை குறைகளை
ஏற்று உற்றார் சுற்றத்தார்
வாழ்த்துக்களை பெற்று இம்மண்ணில்
வாழ்ந்திடும் காலமெல்லாம் உங்கள் திருமண
உறவும் நீடித்திட இத்திருமணநாளிலே வாழ்த்துகிறேன்
புன்னகையுடனும் வற்றாத
நதியாய் கடல் சேர்ந்தும் தீராத நீராய் உங்கள்
இல்லற வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்!
பொன்னான திருமணநாள் வாழ்த்துக்கள்!
இன்பங்களில் பங்கெடுத்து
துன்பங்களில் துணை நின்று
தன்னம்பிக்கை இழந்திடாமல்
வாழ்வின் இருபக்கங்களையும்
சேர்ந்தே எதிர்கொண்டு குடும்பமெனும்
குருவிக்கூட்டில் பற்பல சிறப்பு பெற்று வாழ்ந்திட
இன்றைய திருமணநாள் அத்திவாரமாய் அமையட்டும்
வாழ்வின் மறக்க முடியாத ஓர்
அங்கம் திருமணம்! அது அன்றைப்
போல் என்றுமே மகிழ்வுடனே தெடரட்டும்!
இத்திருமணநாளும் அற்பதமாய் அமையட்டும்!
பூக்களென என என் எழுத்துக்களை நினைத்து
அன்புடனே திருமண நாள் வாழ்த்துக்களை
வார்த்தைகளால் அள்ளித் தெளிக்கிறேன்!
மகிழ்வான நாளாய் அமையட்டும் உங்கள் திருமணநாள்!
கெட்டிமாளம் முழங்க மாங்கல்யம்
கழுத்திலேறி உறவினை ஊருக்குச் சொல்ல
நேசம் பொங்கப் பார்த்துக் கொண்ட இருவிழிகளினதும்
காதலும் இதுபோலவே பல திருமணநாளை ஒன்றாகக்
கொண்டாடிட வாழ்த்துக்கள்!
Tamil Language Wedding Anniversary Wishes In Tamil
வாழ்நாள் ஆயுள் வரத்தை
பெற்று உங்கள் காதல் தொடரட்டும்!
மலரும் ஒவ்வொரு திருமணநாளும்
இதுபோலவே என்றென்றும் தித்திப்பாய் இருக்கட்டும்!
இளமை முதுமையைத் தொட்டாலும் உங்கள்
உறவில் சிறு விரிசல் விழாமல் இருந்திட உங்கள் கல்யாண
நாளிலே பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்
கலாவதியானது காதலாய் காத்திருந்த
நாட்களே! இனி கலாவதியில்லா பயணமொன்று
தொடரும்… ஒவ்வொரு ஆண்டும் திருமணநாளாய் உங்கள்
உறவை அது பேசும்… இப்பயணத்திலே காணும் சிறு சிறு
சஞ்சலங்களையும் அன்பால் வென்று இன்னும் பல்லாண்டு
வாழ்ந்து பல திருமணநாட்களைக் கொண்டாட வாழ்த்துக்கள்!
உங்கள் துணையோடு நீண்டதோர்
பயணம் காத்திருக்கிறது.. திருமணத்திலே இணைந்தது இரு
மனங்கள் மட்டுமல்ல இரு குடும்பங்களும் தான்..
புரிந்துணர்வுள்ள துணையாக கூடவே நின்றிட அவர்கள்
குடும்பத்தை தன் குடும்பமாய் ஏற்று நகர்ந்திட இத் திருமணநாள்
சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்!
கடந்து வந்த கசப்புக்கள் எல்லாம்
மாயமாய் மறையட்டும்! புத்தம் புது மலரைப்
போலவே வனப்புடன் தொடங்கட்டும் உங்கள் திருமணநாள்!
1st Wedding Anniversary Wishes In Tamil
முதல் என்பது முடிவல்ல!
முதல் திருமணநாள் தொடக்கத்தின்
ஆரம்ப புள்ளியே! இணைந்தே தொடர்ந்து
பயணித்திட பிரார்த்தனைகள்!
பல இன்னல்களை சகித்து மின்னல்
கீற்றாய் புன்னகை மின்ன கடந்து வந்த ஒருவருடம்
இன்னும் பல வருடங்களாய் நீடித்திட வாழ்த்துக்கள்!
எதிர்ப்புக்களுக்கு மத்தியில்
காதலாய் கரம்பிடித்து ஒருவருடத்தை
காதலாலே கடந்து விட்ட உங்கள் காதலின் ஆயுள்
நீண்டதாக இருக்க வேண்டி முதல் திருமணநாள்
வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்!
கடந்த வருடம் இந்நாளிலே உங்கள்
திருமணத்தை நாம் கொண்டாடிய
ஞாபகம்! மின்னல் வேகத்தில் நாட்கள் நகர்ந்து விட்ட
உணர்வு! உங்கள் முதல் திருமணநாள் தித்திப்பாய் அமையட்டும்!
சிறிய சிறிய செல்லச் சண்டைகளிலும்
செல்லச் சிணுங்கள்களிலும் நம்மை நாம்
புரிந்துக் கொள்ள எடுத்த முயற்சியிலும்
நமக்கு நாமே செய்துக் கொண்ட சத்தியங்களிலும் நம்
திருமணம் ஓராண்டைத் தொட்டதே தெரியவில்லை…
முதல் திருமணநாள் வாழ்த்துக்கள்
ஒரு வருடம் கழியவே பல
வருடம் காத்திருக்கிறது நீண்டதோர்
வாழ்க்கை பயணம் ஒற்றுமையுடனே
இணைந்து பயணத்திட முதல் திருமண
நாளில் முத்தான வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்
முதலைப் போலவே
வாழ்வின் முடிவு வரையும்
உன்னுடனே இருப்பேன் என
முதல் திருமண நாளிலே சத்தியம் செய்கிறேன் அன்பே!
முதன் முறை நாம் பார்த்தது தொடங்கி
முதன்முறை பெற்றோர் சம்மதத்துடன்
கைப்பிடித்தவரை அனைத்தும் பசுமையாய்
நினைவிலாடுகிறது! நம் முதற் திருமணநாள்
வாழ்த்துக்களை இன்று உன்னோட பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி!
நம் வாழ்க்கைப் பக்கத்தின்
முதல் திருமணநாள் இது!
வார்த்தைகளைக் கோர்த்து
வாழ்த்துகிறேன்! என் துணைக்கு
முதல் திருமணநாள் வாழ்த்துக்கள்!
கனவுடனே நகர்ந்த நாட்கள்!
மெய்யான நாளின்று! என் இணைக்கு
முதலட திருமணநாள் வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்!
25th Wedding Anniversary Wishes In Tamil
வாழ்க்கை எனும் பாதையிலே வழிப்பட்ட
முட்களெல்லாம் ஒருவருக்காய் இன்னொருவர்
தாங்கி நின்றீர்! உம் அன்புக்கு சாட்சியாய்
எண்ணிக்கை வளர்ந்து நிற்கிறது இருபத்தைந்தாய்!
இருபத்தைந்தாவது திருமணநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் நம்பிக்கையும் காதலும்
இருபத்தைந்து வருடங்களை எட்டிவிட்ட
தருணத்தை கொண்டாடி மகிழ்ந்திட திருமணநாள் வாழ்த்துக்கள்!
முன்மாதிரியான காதல் வாழ்வை
பகிர்ந்து திருமணத்தின் வெள்ளி விழாவை
பூர்த்தி செய்திட்ட இனிய தம்பதிகளுக்கு
இருபத்தைந்தாம் திருமணநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
25 வருடங்களக்கு முன் அறிமுகமாகி
காதலால் சலிக்காமல் பல தடைகளை
எதிர்கொண்டு வாழ்ந்திடும் உங்களுக்கு
இனிய 25ஆவது திருமணநாள் உண்டாகட்டும்!
நம் கனவுகளைப் போன்று கஷ்ட்டங்கள்
விடிந்ததும் மறைவதில்லை.. இருந்தும் நிஜவாழ்க்கையின்
கஷ்ட்டங்களை கடந்து வந்து 25ஆவது திருமண நாளில்
நிற்பது உங்கள் அன்பினாலே சாத்தியமானது!
என்றென்றும் மனநிறைவுடன் வாழ 25ஆவது திருமணநாள் வாழ்த்துக்கள்!
இருபத்தி ஐந்தாவது ஆவது திருமணநாளுக்கு
வாழ்த்துக்கள்! இதுபோலவே என்றும் மனமொத்த
தம்பதியினராய் மிளிர்ந்திட எனது பிரார்த்தனைகள்!
25ஆவது திருமண நாளில் அடியெடுத்து
வைத்திருக்கும் அதிர்ஷ்ட்டக்கார தம்பதியினர் நீங்கள்!
வயது நூறாயினும் மகி்ழ்ச்சி குறைவின்றி இருக்க வாழ்த்துகிறேன்
இத்தனை வருட சுமைகளையும் காதலால்
மட்டுமே தனியாக சுமந்து விட முடிவதில்லை..
மனமொத்த தம்பதியினராய் நீங்கள் ஒருவருக்கொருவர்
வைத்த நம்பிக்கையின் வெற்றி இந் நந்நாள்!
25ஆவது திருமணநாள் உங்களை் போலவே
அதிர்ஷட்டமாய் அமைய வாழ்த்துக்கள்!
என் வாழ்நாளில் உங்களைப் போன்ற
காதல் நிறைந்த தம்பதியரைக் கண்டதில்லை…
காதலிக்க வயதில்லை என்பதை உங்களிடமே உணர்ந்தேன்…
உங்கள் 25ஆவது திருமணநாளில் எல்லா
சந்தோஷங்களும் கிடைக்க வேண்டுகிறேன்!
இனிய 25ஆவது திருமணநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்நாளின் மைல்கல் இந்நாள்!
நீங்கள் அற்புதமான தம்பதியினர்!
இறை ஆசியோடு இன்னும் நீண்ட தூரம்
பயணித்திட 25ஆவது திருமணநாள் நல்
வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி!
Anniversary Wishes For Husband In Tamil
நேற்று நடந்து முடிந்த திருமணம் போல்
ஒவ்வொரு திருமண நாளிலும் திகட்ட திகட்ட
உன்னைக் காதலிக்க வேண்டி மனு ஒன்றை
இறைவனிடம் வைத்தப்படி வாழ்த்துகிறேன்…
என் அன்பு கணவனுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்!
உன் சிறு சந்தோஷங்களையும் நம் காதலிற்காய்
அர்ப்பணித்து என்னை கரம் பிடித்த என்னவனுக்கு
இனிய திருமணநாள் உரித்தாகட்டும்!
நான் என்னை மறந்தாலும் உ்ன்னை மறவாதிருக்க
வரம் ஒன்று வேண்டும்! வாழ்வின் கடைசி நொடி
வரை உன்னோடு மட்டுமே இருந்திட வேண்டும்!
பல வண்ண கனவுகளையும் உன்னோட இணைந்தே
கண்டிட வேண்டும்! இன்றைய திருமணநாள்
பொன்னானதாய் அமைய வாழ்த்துகிறேன்!
என் குறைகளை ஏற்று என்றும் என்னுடன் இருப்பவனே
உன் நலத்திற்கும் நீடித்த ஆயுளுக்கும் உன்னவளின்
மனமார்நத பிரார்த்தனைகளும் திருமணநாள்
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!
தோழனாய் அறிமுகமாகி காதலாய் கரம்பிடித்து
மனைவி எனும் அந்தஸ்த்தை தந்தவனே!
நம் திருமணநாளில் இன்னும் பல நினைவுகளை
சேகரித்திட மனைவி இவள் வாழ்த்துக்கள்!
தோழியாய் என்னை கொண்டாடியவனே!
என் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவனே!
என்றும் உனக்கே உனக்கானவளாய் திருமணநாள்
வாழ்த்துக்களை கர்வத்துடனே சொல்லிக் கொள்கிறேன்!
வாழ்க்கையின் அனைத்து சந்தோஷங்களையும்
நீ பெற வேண்டும்! வெற்றி வாகை நீ சூட வேண்டும்!
உன் இனியவளின் புது வேண்டுதல் நம் திருமண நாளிலே!
என் மனதைக் கொள்ளைக் கொண்ட
என் காதல் கணவனுக்கு திருமணநாள் விஷேடமாக அமைய வாழ்த்துகிறேன்!
ஒவ்வொரு வருடமும் நம்மை சந்தித்து
செல்லும் இனிமையான சாரல் திருமண நாள்!
இதோ இந்த வருடமும் அன்றைய நினைவுகளை
நமக்கான நாளை மீட்டிப் பார்த்திட வந்துள்ள
திருமண நாளை சேர்ந்தே வரவேற்போம் என்னவனே!
திருமணநாள் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!
உன் காதலுக்கு நான் மட்டுமே சொநதக்காரி பெருமையுடன்
ஊர்மெச்ச நம் இதயங்கள் இட்ட முடிச்சு அவிழாமலே
இருக்கட்டும்! திருமணநாள் வாழ்த்துக்களை
உனக்காக பதிவு செய்கிறேன்!
வான் நீளத்துக்கு நம் காதலும் பரவிக் கிடக்க வேண்டும்!
என்னை விடவும் உன்னை நேசித்திட வேண்டும்!
வருடங்கள் கடந்த பின்னும் நம் காதல் அழயாமல் இருந்திட வேண்டும்!
என்னவனே!
என்றும் நீ எனக்கானவனாய் மட்டுமே இருந்திட வேண்டும்!
இதுபோல் பல திருமண நாட்களை சேர்ந்து கடந்திட வேண்டும்!
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!
Marriage Anniversary Wishes For Wife In Tamil
உறவுகளின் எதிர்ப்பை மீறி என் மீதான
நம்பிக்கையில் என்னோட கரம் கோர்த்தவளே!
நீ என்னுடன் எந்நாளும் வேண்டுமே! என்
இனியவளுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்!
எனக்காய் நீ சகித்துக் கொண்ட இன்னல்கள்
ஏராளம் என் அன்பே! தவமின்றி கிடைத்த வரமடி நீ எனக்கு!
என்னோடு சேர்த்து என் குடும்பத்தையும் ஏற்றுக்
கொண்டவளுக்கு இத்திருமணநாள் இன்னும் இனிமையாகட்டும்!
என்னுடன் நீ பேச மாட்டாயா? என காத்திருந்த நாட்கள்
என்னுடன் மட்டுமே இனி அதிகம் பேசிடுவாளென மாறிப்
போனது நம் திருமணத்தில்! என் மனதிற்ககு இனியவளுக்கு
திருமணநாள் அற்புதமாய் அமைந்திட வாழ்த்துக்கள்!
சொந்தங்கள் கூடி அக்னி சுற்றி பெரியார்
ஆசி பெற்று ஊர் வாழ்த்த இணைந்த
சொந்தமே! திருமணநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
அழகுப் பதுமையொன்று என் பக்கத்தில் தலைகுனிந்து
அமர்ந்திருந்த அந்நாளை என்னால் எப்படி
மறந்திட முடியும்? என் அன்பு மனைவிக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்!
இல்லத்தரசியாக என் வீட்டிற்குள் காலடி வைத்தவளே!
எப்போது என தெரியாமலே என் இதயத்திலும் சேர்ந்தல்லவா நுழைந்து விட்டாய்!
என் இதயத்தில் ராணியாக முடி சூடிக் கொண்டவளுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்!
நான் முதன் முதல் இட்ட மூன்று முடிச்சிற்கு
வயது சொல்லும் நாள் இன்று! நானிட்ட மாங்கல்யத்தை
போற்றிடும் என் அன்பு மனைவிக்கு இனிய திருமணநாள்
வாழ்த்துக்கள் உண்டாகட்டும்!
அருமையான துணையுடன் கரம் கோர்த்ததில் மகிழ்வடைகிறேன்!
உன்னுடனே என் வாழ்க்கை நகர்ந்திட ஆசையடி பெண்ணே!
என் காதல் மனைவிக்கு அவள் காதல் கணவனிடமிருந்து
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!
நீ தந்த புன்னகை இன்னும் இனிக்கிறது..
உன்னாலே நான் சிரித்த நாட்கள் ஏராளம்…
நன்றி சொல்லி உன்னை வேறுபடுத்திட விருப்பமில்லை..
எனக்காகப் பிறந்தவளுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்!
என் ஆரோக்கியம் குன்றினாலும் உன் காதலில் நீ குறை
வைத்ததில்லை.. அம்மாவாய் என்னை பத்திரமாய்
பார்த்துக் கொண்ட உன்னை ஆயுள் உள்ளவரை மறவேன்
பெண்ணே! நம் காதலின் ஆயுள் இன்னும் நீள பிரார்த்தித்துக்
கேட்பேன்! என் முதல் சொத்தே நீ தான் பெண்ணே!
திருமணநாள் வாழ்த்துக்கள் என் இனியவளே!
Wedding Anniversary Wishes In Tamil Kavithai For Parents
அப்பா, அம்மா உங்களை பெற்றோராய் பெற்றது எனது அதிர்ஷ்ட்டமே!
உங்கள் இருவருக்கும’ இடையிலுள்ள புரிந்துணர்வும் காதலும் என்னை வியக்க வைக்கிறது! இது போன்று அன்போடு ஆசிர்வதிக்கப்படவர்களாய் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்! இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு அதிசிறந்த பெற்றோராய் என் குழந்தைகளுக்கு
பாட்டன் பாட்டியாய் நீங்கள் இருவரும் எங்களுக்கு
கிடைத்தது இறைவனின் ஆசிர்வாதமே!
இந்த திருமணநாள் உங்களுக்கு மகிழ்ச்சி
நிறைந்ததாய் இருக்க வாழ்த்துகிறேன்!
காதலிலும் நம்பிக்கையிலும் சிறந்த முன்மாதிரியான
தம்பதிகளை என் பெற்றோராய் அடைந்ததில் மகிழ்ச்சி!
பொன்னான திருமணநாள் வாழ்த்துக்கள்!
அப்பா, அம்மா! உங்கள் இருவரினாலே அற்புதமான
குடும்பத்தை பெற்றேன்… பாசத்தின் உணர்ந்தேன்..
காதலின் உன்னதத்தை அறிந்தேன்…
பல பாடங்கள் உங்களிடமே கற்றேன்..
உலகின் சிறந்த பெற்றோருக்கான விருதை
உங்களுக்காகவே சமர்ப்பணம் செய்வேன்..
என்றும் என்னோடு துணை நிற்கும் உங்களிருவருக்கும்
இத்திருமணநாள் இனிமையாக அமையட்டும்!
இன்னொரு வருடம் வந்து விட்டது!
நான் கொண்டாடி மகிழ்ந்திடவே வந்து விட்டது!
என் அப்பா, அம்மாவின் திருமண நாள்!
உலகின் தலைசிறந்த பெற்றோரே!
உங்களுக்கு திருமணநாள் நல் வாழ்த்துக்களை
தெரிவிப்பதில் பலகோடி ஆனந்தம்!
எப்போதும் வற்றாத நீராய் உங்கள் காதல்!
உங்கள் இருவரின் காதலும் என்னை மகிழ்விக்கிறது!
என்றும் என்றென்றும் காதலுடனே இன்னும்
பல திருமணநாட்களை சந்தித்திட பிரார்த்திக்கிறேன்!
தித்திக்கும் நினைவுகளுடன் திருமண நாள் அமைந்திட வாழ்த்துக்கள்!
உங்கள் தோற்றத்தில் மாற்றமுண்டு..
ஆனால் உங்கள் காதலில் துளியும் மாற்றமேதும் இல்லை..
பிரம்மிக்க வைக்கிறது உங்கள் வாழ்க்கை பயணம்!
இன்று போல் என்றும் காதலுடன் வாழ்ந்திட
மகிழ்வான திருமணநாள் வாழ்த்துக்கள்!
அன்பினால் மட்டுமே குடும்பத்தை ஆளத்
தெரிந்த என் அன்பின் பெற்றோருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்!
என் அன்பின் பெற்றோரே! உங்கள் இருவரின்
நேசத்தை அடையும் பாக்கியம் எனக்கு
கிட்டாது இருந்திருந்தால் நான் என்னவாகியிருப்பேனோ?
நேசத்தின் மகிமையை உணர்த்திய உங்களுக்குள் என்றும்
நேசத்திற்கு குறைவில்லாது இருக்கட்டும்!
திருமணநாள் நல் வாழ்த்துக்கள்!
நான் என் விழிகளால் பார்த்த அற்புதமான தம்பதினர் என் அப்பா,
அம்மா! என் அதிர்ஷ்ட்டக்கார அப்பா,
அம்மாவுக்கு இனிமை நிறைந்த திருமணநாள்
வாழ்த்துக்களை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
Anniversary Wishes For Brother In Tamil
சிறந்த தம்பதியினருக்கு திருமணநாள்
நல் வாழ்த்துக்கள்! இப்போதைப் போல்
எப்போதும’ காதலுடன் வாழ வாழ்த்துக்கள்!
உங்கள் திருமண உறவை பலப்படுத்திட
இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்!
இருவரும் மகிழ்ச்சி பொங்க நீடுழி வாழ வேண்டும்!
திருமணநாள் பசுமையாக அமைந்திட வாழ்த்துகிறேன்!
சகோதரா! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!
அண்ணியின் சுக துக்கங்களில் பங்கேற்று
இனிமையான இல்லற வாழ்வை இருவரும்
இணைந்து அமைத்திட வாழ்த்துகிறேன்!
அன்பின் சகோதரனே! அருமையான
பெண்ணை எனக்கு அண்ணியாக்கிக்கினாய்!
இருவரும் திருமண நாளை சிறப்பாக கொண்டாடிட மகிழ்ந்திட வாழ்த்துக்கள்!
சகோதரனே! உங்களுடைய சிறப்பான நாள் இது!
உண்மையில் மீண்டும் ஒரு பெரிய கொண்டாட்டத்திற்கு
பொருத்தமன நாளிதில் திருமணநாள் நல்
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!
ஊரே கூடி கொண்டாடிய உங்கள் திருமணத்தை
மீட்டும் நாள் இன்று! திருமண தின வாழ்த்துக்கள் சகோதரனே!
உங்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்வும் சிரிப்பும் நிறையட்டும்!
உங்கள் காதலிற்காய் முழு உலகையும் எதிர்த்து நின்ற
போது சகோதரனே! உன் காதலின் ஆழத்தை உணர்தேன்!
அன்று நான் உன்னிடத்தில் கண்ட காதல் என்றும் உன்னிடம்
இருக்க வேண்டுகிறேன்! உன்னை நம்பி சொந்தங்களை
விட்டு உனக்காக வந்திருக்கும் என் அண்ணியை
பத்திரமாய் பார்த்துக் கொள்! இருவரது உறவும்
இணை பிரியாதிருக்க விருப்புடனே திருமண
நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்!
நீங்கள் இருவரும் இந்நாளை சிறப்பாக கொண்டாடிட
வேண்டும்! இந்த காதல் வாழ்நாள் முழுவதுக்கும்
தொடர வேண்டும் என பிரார்த்தித்துக் கேட்டவளாய்
என் அன்பு சகோதரனுக்கு பொன்னான திருமணநாள்
வாழ்த்துக்களை தெரிவிப்பதில் ஆனந்தம்!
சகோதரனே நட்பாக கிடைத்தது எனது அதிர்ஷ்ட்டம்!
எனது நலனுக்காய் யோசித்திடும் என் அன்பு
சகேதரனின் திருமண வாழ்வு சிறக்க திருமணநாள்
வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்!
மகிழ்வான தம்பதியினர் இணைந்து எடுத்த
அற்புதமான புகைப்படங்களை வைத்திருப்பார்கள்
உங்களைப் போலே! சகோதரனே! உங்கள் இருவர்
மீதும் நான் அளவு கடந்த பாசம் வைத்துள்ளேன்! உங்கள்
காதல் பயணம் பல யுகங்களாய் பயணிக்க வாழ்த்தும்
உன் பிரியமான தங்கையிடமிருந்து உங்கள்
இருவருக்கும் திருமணநாள் வாழ்த்துக்கள!
Wedding Anniversary Wishes For Sister In Tamil
சகோதரியே! உன்னைப் போன்றதோர்
உறவு கிடைத்திட நான் தவம் செய்திருக்க
வேண்டும்! உன் திருமணநாளில் உலகிலுள்ள
மகிழ்ச்சியெல்லாம் உன்னை வந்தடைய வாழ்த்துகிறேன்
என் அன்பின் சகோதரியே!
உனக்கும் உன் துணைக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும்! உங்கள் இருவரது வாழ்விலும்
மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்க கூடாதென மனதார வேண்டுகிறேன்!
சகோதரியே! உன் திருமண வாழ்க்கை
நன்றாக அமைந்ததில் நான் மகிழ்வடைகிறேன்..
இறுதி வரையிலும் உங்கள் உறவு தொடர வாழ்த்துகிறேன்!
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!
சகோதரியே! உன் வாழ்வின் முக்கிய தருணமான
திருமணநாளில் சிறந்த தம்பதியினராய் உங்கள
இருவரது சகல கனவுகளும் ஈடேறி பூரண
ஆரோக்கியத்தோடு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!
ஏற்றத் தாழ்வுகள் எத்தனையாயிரம் இருந்தாலும்
மனமொத்த தம்பதிகளாய் உங்கள் உறவு தொடர்ந்திட
சகோதரியே! உன் திருமணநாளில் வாழ்த்துகிறேன்!
தித்திக்கும் திருமணநாள் தீபாவளி வைபவம்
போலே கோலாகலமாய் அமைந்திட உங்கள்
காதல் பல்லாண்டு வாழ்ந்திட என் சகோதரியை
வாழ்த்துகிறேன்! இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!
உன் பிரார்த்தனைகள் எல்லாம் வெகுவிரைவிலே
நடந்திட உன் வாழ்கைப் பயணம் சிறப்பாக
மகிழ்ச்சி கடலிலே நீ நீச்சலடித்திட
முன்மாதிரியான தம்பதியினராய்
வலம்வர பிராத்தித்தவளாய் திருமணநாள்
வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்
எண்ணம் போல் வாழ்க்கை அமைந்து
காதலெனும் வானிலே வட்டமிட்டுத் திரிய
இறை ஆசியோடு வாழ்க்கை நகர உன்
திருமணநாளிலே வாழ்த்துகிறேன் சகோதரியே!
அன்பும் ஆறுதலும் பெருக்கெடுக்க காலம்
கடந்தும் மாற்றமில்லா காதலொன்றை
கண்டிட உங்கள் வாழ்நாளின் திருநாளாம்
திருமணநாள் அதி விஷேடமாய் அமைந்திட
உளமாற வாழ்த்துகிறேன்! என் அன்பு
சகோதரிக்கு பொணன்னான திருமண நாளாய் அமையட்டும்!
என்றுமே பிரியமுடனும் இணைபிரியாமலும்
விட்டுக்கொடுத்தல்களுடன் இனிமையான
இல்லறம் அமைய இந்நாளில் வாழ்த்துகிறேன்!
Wedding Anniversary Wishes For Friends In Tamil
சூரியனைக் கண்டால் மலர்ந்திடும் தாமரையைப்
போல் உங்கள் ஒவ்வொரு விடியலும் அன்பாலே
தொடங்கட்டும்! வானும் விண்மீனும் போலே
ஒற்றுமையாய் வாழ வாழ்த்துகிறேன்!
முத்தான திருமணநாள் வாழ்த்துக்கள் என் தோழமைக்கு!
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து ஒன்றாய்
இணைந்த காதல் பட்சிகளே! விரிந்த கிடக்கும்
ஆகாயத்தை போல் காத்திருக்கின்றது வாழ்க்கை
பாதை… கற்களும் முட்களுமாய் வழிநெடுகிலும்
காத்திருக்கிறது சவால்கள்… ஒன்றாகவே
யாவற்றையும் கடந்து வாழ்வில் வென்றிட
மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்!
என் வாழ்வில் கிடைத்த நான் கொண்டாடும் உறவு உன் நட்பு!
நண்பனே உன் இணையோடு இணைப்பிரியாது வாழ்ந்திட
வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்.. திருமணநாள் நல் வாழ்த்துக்கள்!
என் உன்னதமான நட்புக்கு! இத்திருமணநாளிலே
சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!
திருமணநாள் என்பது நேற்றைய நினைவு!
இன்றைய மகிழ்ச்சி! ஒருவரையொருவர் புரிந்து
மனமொத்த தம்பதிகளாய் இம்மண்ணிலே
நெடுகாலம் வாழ வாழத்துகிறேன்!
நண்பா! உன் ஆயுள் முழுவதும் இரட்டிப்பு
சந்தோஷம் உன் துணையாலே கிடைக்க வேண்டுகிறேன்!
உன் மனைவி, குழந்தைகளென யாவரும்
அன்புடனும் ஒற்றுமையுடனும் அழகான குடும்பத்தை
கட்டமைத்திட வாழ்த்துகிறேன்!
இத்திருமணநாள சிறப்பாக அமையட்டும்!
உங்கள் இருவரையும் ஒன்றாகப் பார்க்கையில்
அற்புதமான ஜோடிப் பொருத்தம் என்று தோன்றாமல்
இருந்ததில்லை.. தஉங்கள் ஜோடிப் பொருத்தத்தைப்
போலவே வாழ்க்கையும் சிறப்பாக அமைந்திட
அற்புத திருமண நாளொன்றை கொண்டாடிட
சிநேகிதனாய் வாழ்த்துகிறேன்!
உங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடும் திருமணநாள்
மறக்க முடியாத நாளாக அமைந்திட நாளைய
எதிர்பார்ப்புக்கள் எல்லாம் ஈடேறிட திருமணநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் காதலினால் இன்னுமோர் வருடத்தை கடந்து விட்டீர்கள்!
தோழா! உன் கொண்டாட்டத்திற்கு உரிய நாளில்
மட்டற்ற மகிழ்வுடன் திருமணநாள்
வாழ்த்துக்களை அனுப்பி வைக்கிறேன்
உங்கள் இருவருக்கும் இடையிலான பந்தம் இன்னும்
பலம் பொருந்தியதாக அமைந்திட தோழனே!
உனக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்! என்றும் மகிழ்வுடன் வாழுங்கள்!